மதுவில் விஷம்  கலந்து குடித்த தொழிலாளி பலி !

மதுவில் விஷம்  கலந்து குடித்த தொழிலாளி பலி !

மதுவில் விஷம்

திங்கள் சந்தை அருகே மதுவில் விஷம்  கலந்து குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (47). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (43). இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் (21) என்ற மகன் உள்ளார். அர்ஜுனனுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளார். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகனை அழைத்துக்கொண்டு அமுதா பெங்களூர் சென்று விட்டார். தனிமையாக வசித்து வந்த அர்ஜுனன் கடந்த 17ஆம் தேதி மதியம் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது. இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தவரை மீட்டு உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் அர்ஜுனன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரிய வந்தது.

Tags

Next Story