மேஸ்திரி வேலை செய்யும் கூலிதொழில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

மேஸ்திரி வேலை செய்யும் கூலிதொழில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

உயிரிழப்பு

ஆம்பூர் அருகே மேஸ்திரி வேலை செய்யும் கூலிதொழில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மேஸ்திரி வேலை செய்யும் கூலிதொழில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த வேலு இவரது மகன் கமலநாத் வயது 36 இவர் மேஸ்திரி கூலி வேலை செய்து வருகின்றார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளது இவர்கள் குடும்பத்தோடு ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கமலநாத் இவருக்கு சொந்த ஊரான ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார் அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் சிக்கி உயிரிழப்பு இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story