சதுரகிரி மாசி மாத பௌர்ணமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மாசி மாத பௌர்ணமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசதி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. சிவாலய தலங்களில் மிகவும் முக்கிய தலமாக விளங்குவதாலும் 18 சித்தர்கள் வாழ்ந்து வருவதாகவும் பக்தர்கள்கூறுகின்றனர். இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் பௌர்ணமி அமாவாசை ஆகிய நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையெறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதிக்கப்பட்டடு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை ஏறும் பக்தர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிக்கவும் மக்களுக்கு அனுமதி கிடையாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக 21, 22, 23,. 24 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மேலும் ஒரு நாள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story