ஓமலூரில் நடைபெற்ற கோலப்போட்டியில் திரளான பெண்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு தெலுங்கு தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு உண்ணாமுலை தாயார் உடனாகிய அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசன பெருவிழா கடந்த 18ஆம் தேதி திங்கட்கிழமை கொடி ஏற்றுதல், ஆருத்ரா தரிசனம் முகூர்த்தக்கால் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் விழா சிறப்பாக தொடங்கியது. இதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசன பெரு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண பொடிகளை கொண்டு அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மிக்கி மவுஸ் உள்ளிட்ட உருவங்கள் கொண்ட கோலங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த கோல போட்டியில் கலந்து கொண்டு முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த பெண்களுக்கு ஓமலூர் பேரூராட்சி துணைத் தலைவர் புஷ்பா பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் பேரூராட்சி 1வது வார்டு பெண்கள் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 100 பெண்கள் கலந்து கொண்ட கொண்டு கோலங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இந்த போட்டியை ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சுமார் 200பேர் கோலங்களை கண்டுகளித்தனர்.