ஒற்றை சக்கர சைக்கிளில் ஒய்யார சவாரி !
ஒற்றை சக்கர சைக்கிள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி இருக்கும் தர்மபுரியை சேர்ந்த ஸ்ரீதரன் என்ற முதியவர் தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பாரம்பரிய சைக்கிளிங் செய்ய முடிவு செய்து முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வந்தது இந்நிலையில் ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சக்கர சைக்கிளை ஸ்ரீதரன் தானே வடிவமைத்து அதனை ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் பின்பு படிப்படியாக அதனை முழுமையாக ஓட்டும் நிலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் பார்த்து வியந்து ஆச்சரியத்துடன் பாராட்டுவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதனால் வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தினமும் தரங்கம்பாடியில் இருந்து பொறையார் வரை சாலையில் ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார்.