கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது !

கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது !

 சிறுத்தை

தாளவாடியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பத்தால் விவசாயிகளை ஆறுதல் அடைய செய்து உள்ளது.

தாளவாடியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், ஜீரவள்ளி, விளாமுண்டி உள்ளிட்ட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை , புலி உள்ளிட்ட விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது.

தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வந்ததோடு கால்நடைகளையும் வேட்டையாடி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் தாளவாடி, தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவசுப்பரமணியம் தோட்டத்தில் கூண்டு வைத்து அதில் நாயை கட்டி வைத்து இருந்தனர்.

கூண்டில் வைத்திருந்த நாயை தின்பதற்காக சிறுத்தை வந்து உள்ளது. அப்போது அந்த கூண்டில் சிறுத்தை வசமாக சிக்கி கொண்டது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பத்தால் விவசாயிகளை ஆறுதல் அடைய செய்து உள்ளது.

Tags

Next Story