சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆயுள் தண்டனை கைதி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆயுள் தண்டனை கைதி

 எடப்பாடி அடுத்த தேவூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆயுள் தண்டனை கைதி தாக்கியதால், பொதுமக்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

எடப்பாடி அடுத்த தேவூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆயுள் தண்டனை கைதி தாக்கியதால், பொதுமக்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

எடப்பாடி அடுத்த தேவூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய குடி போதை ஆசாமி கைது... சேலம் மாவட்டம் தேவுரை அடுத்த புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் கோவிந்தன்காட்டு வலசு பகுதியில் வசித்து வரும் கண்ணையின் மகன் ஆனந்தன் 42 தறி கூலித் தொழிலாளி இவர் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் குடிபோதையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து தேவூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் முதுநிலை காவலர் மயில்சாமி ஆகிய இருவரும் தகராறு நடைபெற்ற இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்ட ஆனந்தனை எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர் அதற்கு ஆனந்தன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் முதுநிலை காவலர் மயில்சாமி ஆகிய இருவரையும் தகாத வார்த்தையில் பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தேவூர் காவல் துறையினர் குற்ற எண்: 24/2024 ச/பி 294(b), 332, 506(i) இதச ஆக வழக்கு பதிவு செய்து ஆனந்த்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பொதுமக்களின் பிரச்சினையை விசாரிக்க சென்ற போலீசாரையே தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது... ரவுடிகளிடமிருந்து போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத போது பொதுமக்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது போலீசார் விசாரணையில் ஆனந்தன் என்பவர் ஏற்கனவே சேலம் FTC-1 நீதிமன்றத்தில் 28.07.2009ல் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ,10,000/- அபராத விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்தவர். என்பது தெரியவந்துள்ளது.

Tags

Next Story