மயிலம் அருகே கருங்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

மயிலம் அருகே கருங்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து
போக்குவரத்து பாதிப்பு
மயிலம் அருகே கருங்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராஜசேகர் (வயது 42). டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு மயிலம்-செண்டூர் சாலை மலையடிவா ரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து கருங்கற்களை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டார். அந்த லாரி மயிலம் அடுத்த பெரும்பாக்கம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கருங்கற்கள் சாலையில் கொட்டின. டிரைவர் லாரி இடிபாட்டில் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்துக்குள்ளான லாரி மற்றும் கருங்கற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக மயிலம்-புதுச்சேரி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story