தார் பாரம் ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

சங்ககிரி அருகே தேசியநெடுஞ்சாலையில் தார் பாரம் ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசியநெடுஞ்சாலை பகுதியில் கார் ஏத்திச்சென்ற லாரி தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மேலவாளவாடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனந்தசித்தன். இவர் சேலத்திலிருந்து கோவைக்கு லாரியில் தார் பாரம் ஏற்றிக்கொண்டு சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதுவதை கட்டுப்படுத்த லாரியை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையோரம் தலைகவிழாக கவிழந்து விபத்துக்குள்ளானதில். லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story