இரணியல் அருகே நள்ளிரவில்  கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த லாரி

இரணியல் அருகே நள்ளிரவில்  கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த லாரி
இரணியல் அருகே குளத்தில் பாய்ந்த லாரி
இரணியல் அருகே நள்ளிரவில்  கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் லாரி பாய்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் கயிறுகளை மூட்டைகளாக ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி லாரி ஒன்று  சென்று கொண்டிருந்தது.  அந்த லாரியை வினோ (34) என்பவர் ஓட்டி சென்றார். கிளீனர் செந்தில் (32) என்பவரும் சென்று கொண்டிருந்தார்.       லாரி நள்ளிரவு ஒரு மணிக்கு இரணியல், ஆழ்வார்கோவில் அரசுமூடு குளம் அருகே உள்ள வளைவான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென  லாரி கட்டுப்பாட்டு இழந்து எதிர்பாராத விதமாக குளத்தில் பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது.        இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது லாரி விபத்தில் காயம் அடைந்த வினு மற்றும் செந்திலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரணியல்  போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story