ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதிய லாரி
சின்னசேலம் பகுதியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைவாசல் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இருந்து மரக்கட்டை லோடு ஏற்றிக்கொண்டு தலைவாசல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. தலைவாசல் ஏரிக்கரை அருகே வந்த போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் அந்த லாரி, தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவர் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த மரக்கட்டைகள் சிதறி கிடந்தன. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக நேற்று 8 இரவு மணியில் இருந்து 9 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் அந்த பாதையில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் தேசிய நெடுஞ் சாலையில் கிடந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story