நள்ளிரவில் நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் - போலீசார் விசாரணை

லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
நள்ளிரவில் நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மாவட்டம், பெரியகுளம், வி.ஆர்.பி.நாயுடு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் முத்துப்பாண்டி வயது 59. லாரி டிரைவர். கரூர், கோதை நகர், யுனிவர்சல் கார்டன் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பிரமணியம் வயது 63 என்பவருக்கு சொந்தமான டி என் 47 பிபி 6562 என்ற எண் கொண்ட லாரியை முத்துப்பாண்டி இயக்கி வந்துள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, தேவகவுண்டனூர் பகுதியில் செயல்படும் அல்ட்ராடெக் சிமெண்ட் பேக்டரியில் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு லாரியை முத்துப்பாண்டி நிறுத்தி இருந்தார். பின்னர் லாரியிலேயே அவர் உறங்கிக் கொண்டிருந்தார். இரவு இரண்டு மணி அளவில் திடீரென லாரி தீ பற்றியது. தீ மளமளவென பரவி லாரி எரிந்து நாசமானது. இது குறித்து முத்துப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story


