காஞ்சியில் பொது கழிப்பறை கட்டடத்தில் செழித்து வளரும் செடி, கொடிகள்
செடிகள் வளர்ந்துள்ள கழிப்பறை
காஞ்சிபுரம் மாநகராட்சி 31வது வார்டு, நாகலுாத்துமேடு பகுதியில், 2013- - 14ல், 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறையை இப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தில் மேற்புறத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டி உள்ளன. கட்டடத்தில் முளைத்துள்ள செடிகள் அருகில் உள்ள மின்கம்பத்திலும், மின் ஒயர்களிலும் பரவியுள்ளது.
செடிகளின் வேர்களால் கழிப்பறை கட்டடம் நாளடைவில் வலுவிழக்கும் சூழல் உள்ளது. மேலும், காற்றடிக்கும், செடி, கொடிகள் மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பொது கழிப்பறை கட்டடத்தின் மீது முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."