கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து
விபத்துக்குள்ளான பேருந்து
கோவையிலிருந்து தனியார் சொகுசு பேருந்து 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு கடலூரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டிச் வந்ததுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடிக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக முன் பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் பிரேம்குமார், மற்றும் பயணிகள் கோவையைச் சேர்ந்த பிரேமா, கடலூரைச் சேர்ந்த சம்பத், பிரணவ், உள்ளிட்ட 9 ஆண்கள், 2 பெண்கள் என 11பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.