பௌர்ணமி நிலவில் வைகை நதிக்கு மகா ஆரத்தி திருவிழா நடைபெற்றது
பௌர்ணமி நிலவில் வைகை நதிக்கு மகா ஆரத்தி திருவிழா நடைபெற்றது
காவிரி,தாமிரபரணியை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் இயற்கை வளங்களில் ஒன்றான நதிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக வைகை மகா ஆரத்தி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டின் மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு வைகை நதியின் மக்கள் இயக்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஜி தலைமையில் வைகை ஆற்றங்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் காசி கங்கை ஆரத்தி போல வைகை அன்னைக்கு பெளர்ணமி நிலவில் வைகை நதிக்கு மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓதுவார்கள் 13 திருமுறை, வேதம் மந்திரங்கள் போன்றவை வாசித்தனர். இந்த வைகை ஆரத்தி திருவிழாவில் திரளான பெண்கள்,பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.பின்பு சுமார் 6 மணி அளவில் வைகை அன்னைக்கு மாபெரும் ஆரத்தி எடுக்கும் நிகழ்வில் வைகை நதிக்கு கற்பூரம் காட்டி பின்பு அடுக்கு தீபம்,கும்ப தீபம்,நாகதீபம்,ஒரு முகதீபம்,தூபம் (சாம்பிராணி) என 5 வகையான ஆரத்திகள் கொண்டு மதுரை வைகை நதி வளமாக இருக்க வேண்டும் என்று ஆரத்திகள் காட்டப்பட்டது. பின்பு அங்குள்ள பக்தர்களுக்கும் ஆரத்திகள் காட்டப்பட்டது. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாக மதுரை வைகை ஆற்றிற்கு மகா ஆரத்தி எடுத்தனர்.