பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடிய நபர் கைது

பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடிய நபர் கைது
பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடிய நபர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மேட்டு தெரு, காஞ்சிபுரம் பைபாஸ் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நிறுத்தப்படும் வாகனங்கள், கடந்த இரண்டு மாதங்களாக திருடப்பட்டு வந்தன. இது குறித்த புகார்களின்படி, சிசிடிவி காட்சிகளை வைத்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஒரே நபரே, பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழ்கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளில் பதிவானவரை தேடி வந்தனர். இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர், புதுச்சேரி ரெட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்த அமீர் அப்துல்காதர், 20, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தாம்பரம் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல்காதரை, போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி ஓட முயன்று, எதிரே வந்த காரில் மோதி காலில் காயமடைந்தார். அவரை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Tags

Next Story