செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்
தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தர்மர் (24). தர்மர் தாயில்பட்டி யில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தர்மனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் காவல் நிலையத்தில் நகை திருட்டு வழக்கு சம்பந்தமாக தர்மரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தாயில்பட்டியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள சக நண்பர்கள் தர்மரை திருடன் என கேலி செய்து உள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக தர்மன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை தாயில்பட்டியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது மது போதையில் ஏறி தர்மர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். மேலும் தர்மர் செல்போன் கோபுரத் தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை காவல் துறையினருக்கும் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தர்மரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையின் இறுதியில் தர்மரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் தர்மரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.