செங்கல்பட்டு அருகே வீடு புகுந்து பணம் திருடிய நபர் கைது

செங்கல்பட்டு அருகே வீடு புகுந்து பணம் திருடிய நபர் கைது
வீடு புகுந்து பணம் திருடிய நபர் கைது
செங்கல்பட்டு அருகே வீடு புகுந்து பணம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, 49. ஆறு மாதமாக, செங்கல்பட்டு அடுத்த பாலுாரில் உள்ள வசந்தம் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை, ராமசாமி துாங்கிக்கொண்டு இருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பெட்டியை உடைத்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ராமசாமி கூச்சலிடவே, தப்பிக்க முயன்ற அந்த நபரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், பிடிபட்ட நபர் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், 54, என்பதும், பெட்டியை உடைத்து அதிலிருந்து 2,500 ரூபாய் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Tags

Next Story