மன்னார்குடியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மன்னார்குடியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கோப்பு படம்


மன்னார்குடியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நெடுவாக்கோட்டை வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story