நாகையில் ரயிலில் 60 லிட்டர் சாராயம் பறிமுதல்
நாகையில் ரயிலில் சாராயம் கடத்திய ஒருவர் கைது செய்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 14.02.2024 உதவி ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்களின் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட ரயில்வே நிலையம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளி மாநில சாராய கடத்தல் ஈடுபட்ட. நாகப்பட்டினம் பாப்பா கோவில் அய்யாதுரை மகன் பழனி (50) , என்ற நபரை கைது செய்தும் அவரிடமிருந்து 60 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story