விவசாய தோட்டத்தில் ஆடு திருடிய நபர் கைது
ஆடு திருடிய நபர் கைது
கெங்கவல்லி அருகே விவசாய தோட்டத்தில் ஆடு திருடிய நபர் கைது செய்து அவரிடம் இருந்து ஆடு, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே, நாகியம்பட்டி தண்ணீர் தொட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து, 48. இவர், தனது குடும்பத்தினருடன் விவசாய தோட் டத்தில் வசித்து வருகிறார். வாழக்கோம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது, தோட்டத்தில் கட்டியிருந்த இரண்டு ஆடுகளில், ஒரு ஆடு காணவில்லை. ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில், 23 கிலோ எடை கொண்ட ஆட்டை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து, தம்மம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பி.குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் 56 ,என தெரியவந்தது. ராஜ்குமாரை தம்மம்பட்டி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆடு, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story