வாசுதேவநல்லூரில் செல்போன் கடையில் திருட்டு: ஒருவர் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் கோவில் பத்திரகாளியம்மன் தெருவைச்சேர்ந்தவர் கணேசன் மகன் அழகே சன்(33). இவர் வாசுதேவநல் லூர் புதிய பேருந்து நிலைய உட்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் செல்போன் வாங்க வந்தவர் பல்வேறு வகையான செல்போன்களை அழகேசன் பார்வைக்கு வைத்துள்ளார். அந்த வாலிபர் செல்போன்களை பார்வையிடுவது போல் நடித்து ஒரு செல்போனை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு, எந்த செல்போனும் பிடிக்கவில்லை என்று கடையில் இருந்து புறப் பட்டு சென்று விட்டார்.
அவர் சென்ற பின்னர் அழகேசன் செல்போன் களை சரிபார்த்த போது ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. - இதனையடுத்து அழககேசன் தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவு குகளை ஆய்வு செய்தார். கு அதில் கடைக்கு செல் - போன் வாங்க வந்த வாலிபர் செல்போனை - அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வாசு தேவநல்லூர் காவல் நிலையத்தில் அழகேசன் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிசிடிவி காமிராவில் பதிவான காட்சி மூலம் நடத்திய விசாரணையில் செல்போனை திருடியது வாசுதேவநல்லூர் காந் தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப் பிரமணியன் மகன் காந் தேஸ்வரன் (25) என்பது தெரிய வந்தது. இதனைய டுத்து காந்தேஸ்வரனை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
கைதான காந்தேஸ்வரன் வாசுதேவ நல்லூர், சிவகிரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப் பிடத்தக்கது.