இரணியல் அருகே சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது
கைது செய்யப்பட்டவர்
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கன்கடை அடுத்த பனவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நாகராஜன் ( வயது 38). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கடந்த மாதம் 22ம் தேதி ஆபாச செய்கைகள் காட்டியும், ஆபாச வார்த்தைகள் பேசியும் உள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலடைந்த சிறுமி அடுத்த நாள் பார்வதிபுரத்தில் தான் படிக்கும் பள்ளியில் வைத்து தனது கைகளை தானாக பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறுமியை பள்ளியின் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிட்சை பெற்று வந்த சிறுமி சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் கடந்த மாதம் நாகராஜன் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந் நிலையில் சம்பவம்நடந்த பகுதி இரணியல்காவல் நிலையத்திற்க்குட்பட்ட பகுதி என்பதால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வழக்கு இரணியல் காவல்நிலையத்திற்க்கு மாற்றபட்டது. இந்த நிலையில் இரணியல் காவால் ஆய்வாளர் பத்மாவதி நேற்று சுங்கான்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுங்கான்கடை பஸ்டாப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்த போது அவர் சிறுமி வழக்கில் போலீசார் தேடி வந்த நாகராஜன் என்பது தெரியவந்தது.
பின் அவரை இரணியல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டபிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து, கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.