வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது
X

கைது 

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை 43, என்பவர் எறையூரில் தலப்பாகட்டு பிரியாணி நடத்தி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இவரது வீட்டில் புகுந்து திருட முயன்ற நபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் திருவாரூர் மாவட்டம் முனியூர் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் தினேஷ்குமார் 29, என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் வழிகாட்டுதலின்படி குற்றவாளி தினேஷ்குமாரை, மங்களமேடு காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Tags

Next Story