கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சித்த நபர் கைது
கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சித்த நபர் கைது
எரவாஞ்சேரி பகுதியில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் கைது. எரவாஞ்சேரி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நன்னிலம் மணவாளநல்லூர் கீழ தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் விக்கி என்கிற விக்னேஷ் வயது 23 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இடையூறு விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Next Story