இரண்டு வருடங்களாக வீடு புகுந்து திருடி வந்த முகமூடித் திருடன் கைது 

பேராவூரணியில் கடந்த இரண்டு வருடங்களாக வீடு புகுந்து திருடி வந்த முகமூடித் திருடன் கைது செய்யப்பட்டான்.

பேராவூரணி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக வீடு புகுந்து திருடி வந்த முகமூடித் திருடன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை உள்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் சவுகான் உத்தரவின் பேரில், பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது சேலத்தில் வசித்து வருபவருமான ஜெயசூர்யா (34) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பேராவூரணி என்.எஸ்.என் டவர் பகுதியில் வசித்து வரும் பவித்ரா, பேராவூரணி மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் நீலாவதி, பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோட்டாகுடி பகுதியில் வசித்து வரும் செல்லையன், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் வெண்ணிலா ஆகியோர்களது வீட்டில் இருந்து, முகமூடி அணிந்து, இரவு நேரத்தில் வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 10 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் கைது பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story