மதுரையில் ரோட்டரி -மடீட்சியா சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் ரோட்டரி -மடீட்சியா  சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள்

மதுரையில் ரோட்டரி -மடீட்சியா சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் மடீட்சியா சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மடீட் சியா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி குத்துவிளக்கேற்றி வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் ரோட்டரி வரும் ஆண்டின் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மதுரையில் முக்கிய கம்பெனிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான தகுதியுள்ள இளைஞர்களை நேரடியாக தேர்வு செய்தனர்.

மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் தங்களுடைய சுய விபரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி தகுதி சான்றிதழ் உள்ளிட்டவைகளுடன் கலை அறிவியல் பொறியியல் மருத்துவம்,கம்ப்யூட்டர் படித்த பட்டதாரி இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உடனடியாக வேலையில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ஆனந்த ஜோதி கூறும்போது : இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார். மேலும் பேசிய அவர் ரோட்டரி சங்கம் மூலம் பிங்க் ஆட்டோ என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அதில் ரோட்டரி மாவட்டங்களில் 60 மகளிருக்கு இலவசமாக ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்து அவர்களுக்கு ஆட்டோ வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

ரோட்டரி சங்கம் 3000 ன் அதற்கடுத்த திட்டமாக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும் கூறினார். மேலும் இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம் திண்டுக்கல் தேனி திருச்சி புதுக்கோட்டை பெரம்பலூர் கரூர் உட்பட ரோட்டரி வருவாய் மாவட்டங்கள் அனைத்திலும் நடைபெற இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன், ரோட்டரி வரும் ஆண்டு ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி ரோட்டரி சிறப்பு திட்ட சேர்மன் முரளி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் முருகானந்த பாண்டி, மாவட்ட செயலாளர் சாந்தாராம், துணை ஆளுநர்கள் கௌசல்யா டாக்டர் ரமணன் ரோட்டரி வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர், விக்னேஷ் பாபு, சேர்மன் சிவ சங்கர், செயலாளர் கிருபா தியானேஷ் கோபிசன், பில்லி, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story