ராமநாதபுரம் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ராமநாதபுரம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரவிருக்கும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கும் திமுக செல்வீரர்கள் கூட்டம் தனியார் மகாஹாலில் நடந்த. இதில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வைத்து பேசினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும்பொழுது மிகப்பெரிய மாநாடாக நடத்த வேண்டும். கூட்டத்திற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைவரும் கட்சி தொண்டர்களை அழைத்து வந்து தலைவரை வரவேற்க வேண்டும் என்றார்.
மேலும் 17.02.2924 நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக காலை கீழக்கரையில் உள்ள மிகப்பெரிய மஹாலில் கட்சிக்காக உழைத்த திமுக முன்னோடிகளை அழைத்து வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையில் பொற்கிலி பெற வைக்க வேண்டும் மேலும் இந்த பொற்ககுலி வழங்கும் விழாவிற்கு முக்கிய தலைவர்கள் யாரும் வர வேண்டாம் காரணம் மாலையில்,
தலைவர் பேச இருக்கும் பொது கூட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே தவிர அங்கு பொற்கிலி வழங்கும் இடத்திற்கு குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் மற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றார்.
இதன் பிறகு பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை எல்லாம் வழங்கியது திமுக அரசு முன்பெல்லாம் மிகக் குறைந்த அளவிலே சட்டமன்றம் மற்றும் இதர கூட்டங்களிலும் கலந்து கொள்வர் இன்று அப்படி அல்ல அறிவில் சிறந்து விளங்கும் பெண்கள் எங்கு பார்த்தாலும் முக்கிய பங்குபெறுகின்றனர்.
இதற்கு காரணம் திமுக அரசு தான் எனவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து 40 ம் நமதே என்ற நோக்கத்தில் தலைமை யாரை நிறுத்துகிறதோ அவர்களுக்கு சிறப்பான வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதில் மாவட்ட இளைஞரணி, ஒன்றிய நகர் கழக பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.