ராசிபுரத்தில் பாஜக., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் அமமுக, பாமக., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

தொகுதிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உழைப்பேன்: நாமக்கல் பாஜக வேட்பாளர் பேச்சு
தொகுதிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உழைப்பேன்: நாமக்கல் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வெற்றி பெற்றால் தொகுதிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உழைப்பேன் என நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மெட்டாலா, நாமகிரிப்பேட்டை பகுதிகளின் தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக. பாமக., தமிழ் தேசிய காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியினரிடையே மக்களவை வேட்பாளர் KP.இராமலிங்கம் பேசுகையில், தற்போதைய தேர்தல் வெற்றிக்கு பாஜகவுடன் கூட்டணியினர் கட்சியினரும் இணைந்து பணியாற்றிட வேண்டும். ஒவ்வொருவர் உழைப்பும், தியாகமும் வெற்றிக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இரு முறை சட்டமன்ற உறுப்பினர், வாரியத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அரசியலில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொகுதி மக்களுக்காக உதவியிருக்கிறேன். சேலம்-கரூர் ரயில்வே திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று 1982-ல் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, மதிப்பீட்டுகுழு உறுப்பினர் என்ற அடிப்படையில் டெல்லி சென்றபோது பிரதமரை சந்தித்து மனு அளித்தேன். அதன் தொடர்ச்சி தான் தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது நாட்டின் பிரதமர் மோடி எண்ணிடலங்கா திட்டங்கள் செய்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்டுள்ளார்.இந்தியா வல்லரசு நாடாக மாறப்போகிறது. இதன் மூலம் நாடுமட்டுமின்றி தமிழகவும் வளர்ச்சி பெறும். இதனால் மீண்டும் அவர் பிரதமராக இருந்து வளர்ச்சியை கொண்டுவர என்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றார். கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, அமமுக மாவட்டச் செயலர் ஏ.பி.பழனிவேல், அவைத்தலைவர் எஸ்.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகி முத்துராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்வகுமார், கலைப்பிரிவு தலைவர் செல்வா, செயலாளர் சபரிநாதன்,பாமக நிர்வாகிகள் ச.வடிவேலன், பொன்னுசாமி, ஆ.மோகன்ராஜூ, பாலு, அதிமுக ஒருங்கிணைப்பு குழு ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சால்ட் பாலு, மற்றும் நாமகிரிப்பேட்டை முன்னாள் தலைவர் பழனிவேல், பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநில செயலாளர் எம்.சதீஷ் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ,நகரத் தலைவர் வேலு, மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சித்ரா, நகர மகளிர் அணி துர்கா தேவி, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story