மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் மூன்றோடு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம், மே 25 ஆம் தேதி மாலை மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தில் மாநிலச் செயலாளர் ஜீவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார், கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் இதில் போதுமான, நாட்கள் வேலை வழங்காமல் அதற்கான பண பலனும் கிடைக்காமல் உள்ளது எனவே இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய மாநில நிர்வாகத்தின் படி, ஜூன் நான்கு வாக்கு என்னும் பணி முடிந்த பிறகு முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,

மனு அளிப்பது என்றும் அதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சி என்பது சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ரமேஷ் செல்லமுத்து மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பெரம்பலூர் சங்கீதா வெப்பநிலை சக்திவேல் வேப்பூர் செந்தில் ஆலத்தூர் தமிழ்செல்வன் உள்ளிட்ட சங்கநிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story