பாதுகாப்பு பணி வீரர்களுக்கு உயிர் காக்கும் செய்முறை விளக்க கூட்டம்

மூன்று துறைகளைச் சார்ந்த பாதுகாப்பு பணி வீரர்களுக்கு உயிர் காக்கும் செய்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தலைமையில் காவல்துறை தீயணைப்பு துறை ஊர் காவல் படை ஆகிய மூன்று துறைகளைச் சார்ந்த பாதுகாப்பு பணி வீரர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களிலும் மற்றும் விபத்து மீட்பு பணி காலங்களிலும் மீட்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் சிபிஆர் அளிப்பது குறித்த உயிர் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் அரசு மருத்துவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேரிடர் மற்றும் விபத்து காலங்களில் மீட்கப்படும் நபர்களின் உடல் நிலையை ஆராய்வது அவ்வாறு ஆராய்ந்து அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை வளங்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் நீரில் மூழ்கியவர்கள் மின்சாரம் தாக்கப்பட்டவர்கள் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் என பல்வேறு நிலைகளில் மீட்கப்படும் நபர்களுக்கு CPR எனும் முதலுதவி அளிக்கும் முறை பற்றியும் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படக் கூடிய முதலுதவி சிகிச்சை குறித்தும். அரசு மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நடைபெற்ற உயிர் காக்கும் கலந்தாய்வு கருத்தரங்க கூட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு உயிர் காக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறினர். இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் என மூன்று பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு பணி வீரர்கள் கலந்து கொண்டு உயிர் காக்கும் முறைகள் குறித்து கற்றறிந்தும் கேட்டறிந்தும் செய்முறை விளக்கத்தில் ஈடுபட்டும்.உயிர் காக்கும் முறைகளை கற்றறிந்தனர்.

Tags

Next Story