வங்கியில் புகுந்து கம்பியை காட்டி ரகளை செய்த  நபர்

வங்கியில் புகுந்து கம்பியை காட்டி ரகளை செய்த  நபர்

வங்கிக்குள் புகுந்து ரகளை

குளச்சல் அருகே வங்கிக்குள் புகுந்த நபர் ஒருவர் கம்பியை கட்டி ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் அரசுமையாக்கப்பட்ட தேசிய வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பகல் நேரத்தில் இந்த வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கம்பியுடன் புகுந்தார். அங்கு கேசியர் கவுண்டரில் சென்று பணம் தாருங்கள் என கேட்டவாறு நாற்காலில் உட்கார்ந்து கொண்டார்.

உடனே வங்கி ஊழியர்கள் அவரிடம் வங்கி கணக்கு எண் மற்றும் விவரம் கேட்டனர். அதற்கு அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். இதனால் உஷாரான வங்கி மேலாளர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். குளச்சல் போலீசார் உடனே வங்கிக்கு விரைந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த நபர் கம்பியை கட்டி அவர்களை தாக்க முயற்சித்தார். பின்னர் போலீசார் அந்த நபரிடமிருந்து கம்பியை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நபர் வங்கி இங்கு தானே இருக்கிறது. இரவில் பார்த்துக் கொள்கிறேன் என எச்சரித்தவாறு சென்றார். இந்த சம்பவத்தால் நேற்று அந்தப் பகுதி வங்கி முன் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்தது.

Tags

Read MoreRead Less
Next Story