போதையில் சாலையில் மயங்கி கிடந்த கொத்தனார் உயிரிழப்பு
குடிபோதையில் கொத்தனார் பலி
மார்த்தாண்டம் அருகே பம்மம் சிறியகாட்டுவி ளையை சேர்ந்தவர் சுந்த ரம். அவரது மனைவிரெசி.இந்த தம்பதியின் மகன் சுனில். கொத்தனார். குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இந்தநிலையில் நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற சுனில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அப்போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சுனில் குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுனில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ரெசி புகார் அளித்தார். அதன்பேரில் இன்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.