20,000 பேர் பங்கேற்கும் மினி மாரத்தான்

20,000 பேர் பங்கேற்கும் மினி மாரத்தான்

திருச்செங்கோட்டில் 20,000 பேர் பங்கேற்கும் மினி மாரத்தான் போட்டி 7ம் தேதி நடக்கவுள்ளது என, கே.எஸ்.ஆர்., கல்லூரி தெரிவித்துள்ளது. 

திருச்செங்கோட்டில் 20,000 பேர் பங்கேற்கும் மினி மாரத்தான் போட்டி 7ம் தேதி நடக்கவுள்ளது என, கே.எஸ்.ஆர்., கல்லூரி தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வரும் 7 ம் தேதி கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறையும் இணைந்து மினி மாரத்தான் போட்டிகளை நடத்த உள்ளது, போதை தடுப்பு விழிப்புணர்வு நோக்கத்தை முன் நிறுத்தி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன,இது குறித்து கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது வரும் ஏழாம் தேதி கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களும் காவல் துறையும் இணைந்து மினி மாரத்தான் போட்டிகளை நடத்த உள்ளது.

10 கிலோமீட்டர் 5 கிலோ மீட்டர், இரண்டரை கிலோ மீட்டர், ஒரு கிலோ மீட்டர்,என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன, இந்த போட்டிகளில் கே எஸ் ஆர் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைவர் சச்சின் சிவா,நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்க உள்ளனர் என்று கூறினார், இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்கள் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story