மங்கைநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நவீனக் கழிப்பறை
விழாவில் கலந்து கொண்டவர்கள்
மயிலாடுதுறை அருகே உள்ள மங்கைநல்லூர் பேருந்து நிறுத்தப் பகுதி கும்பகோணம், திருவாரூர், காரைக்கால் ஊர்களுக்கு செல்வதற்கு மையப்பகுதியாக உள்ளது. கடைவீதியிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் தினந்தோறும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான பயணிகள், மற்றும் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
பல ஆண்டு கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி பொது நிதி 2022 - 23 மற்றும் 15வது மத்திய நிதி குழு மானியத்தின்கீழ் நவீன பொதுக் கழிப்பிடம் ரூ.11 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ நிவேதாமுருகன், நவீன பொதுகழிப்பறை கட்டடத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.