போக்குவரத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டி

பள்ளிபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வாகன ஓட்டி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை விழிப்புணர்வு வார விழாவை ஒட்டி பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது செல்போன் பேசியபடியும், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர். இந்நிலையில் சங்ககிரி சாலையில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சிவக்குமார் இதுபோல் செல்போன் பேசியபடி, தலை கவசம் இன்றி வரக்கூடாது என அவர்களுக்கு அபராதம் விதித்தார்.

இதனை ஏற்காத இருசக்கர வாகன ஓட்டி,மற்றும் உடன் வந்த பெண்மணி செல்போன் பேசியபடி, செல்லும் அனைவரையும் நீங்கள் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். ஆளுக்கு தகுந்தார் போல செயல்படக் கூடாது என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த பள்ளிபாளையம் போலீசார் நீங்கள் தவறு செய்து விட்டு இதுபோல அதிகாரிகளிடம் பேசக்கூடாது என அறிவுறுத்தினர். வட்டாரப் போக்குவரத்து விதிகள் படியே செயல்படுவதாகவும் இதுபோல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story