குற்றாலம் ஐந்தருவியில் குரங்கை விழுங்க முயன்ற மலைப் பாம்பு !!

குற்றாலம் ஐந்தருவியில் குரங்கை விழுங்க முயன்ற மலைப் பாம்பு !!

மலைப்பாம்பு 

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி அருவிப்பகுதியில் குரங்கை விழுங்க முயன்ற 8 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி அருவிப்பகுதியில் குரங்கை விழுங்க முயன்ற 8 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.ஐந்தருவிப் பகுதியில் ஏழு தினங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென குரங்குகள் ஒன்றுகூடி அதிகளவில் ஒலி எழுப்பியது. சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று பாா்த்தபோது,அங்கு மலைப்பாம்பு ஒன்று குரங்கை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து, அங்கிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பிரதீப் குமாா் தலைமையில் செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் கணேசன், மாரிமுத்து, சந்திரமோகன், ஆல்பா்ட் ,ராஜா, கோமதி சங்கா் உள்ளிட்ட வீரா்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனா். குரங்கு இறந்திருந்த நிலையில் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனா்.

Tags

Next Story