சேறு சகதியாக மாறிய சாலை: மக்கள் அவதி

சேறு சகதியாக மாறிய சாலை: மக்கள் அவதி

சேறும் சக்தியாக காணப்படும் சாலை

இரணியில் தண்டவாள விரிவாக்க பணியால் சேறும் சக்தியாக மாறியுள்ள சாலையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் சாலஐ உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, தாந்தவிளை, ஆழ்வார்கோவில் கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ்வழியாக வந்து செல்கின்றனர். மேலும் டெம்போ, பைக் உள்ளிட்ட வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த நிலையில் சமீப காலமாக இந்த சாலை செம்மண் குவியலாய் குவிந்து கிடக்கிறது. தண்டவாள விரிவாக்க பணிக்கு போடப்பட்ட செம்மண் மழையில் அரித்துவரப்பட்டு ரோட்டை மறித்து குவிந்து கிடக்கிறது. இதனால் சேறும் சகதியுமாக கிடக்கும் ரோட்டில் கடும் சிரமத்திற்கு இடையில் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த செம்மண் குவியல்களை அகற்ற ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வந்து செல்ல சிரமப்படும் இந்த சாலையில் சேறும் சகதியுமாக குவிந்து கிடக்கும் செம்மண் குவியல்களை அகற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story