எள் வயலில் பயன்படுத்தப்பட்ட இயற்கை கற்பூரக் கரைசல் பூச்சிக் கொல்லி 

எள் வயலில் பயன்படுத்தப்பட்ட இயற்கை கற்பூரக் கரைசல் பூச்சிக் கொல்லி 

இயற்கை பூச்சி கொல்லி தெளிக்கும் மாணவி

எள் வயலில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரக் கரைசலை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் மாணவி.

கிராமப்புற வேளாண் பணியும், இயற்கை வேளாண்மையும் என்ற கிராமப்புற வேளாண்மைப் பணியில், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மாணவிகள் பட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து பணி அனுபவம் பெற்று வருகின்றனர்.

இதையொட்டி, பட்டுக்கோட்டை அருகே செண்டாங்காடு கிராமத்தில், சாம்சன் லெஸ்லி கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை முறை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். அவரை சந்தித்த மாணவிகள் அவரிடமிருந்து இயற்கை வேளாண் நுட்பங்களை அறிந்தனர். மேலும் அவர் கற்பூரக் கரைசல், அமிர்த கரைசல்,

மீன் அமிலம், மூலிகை பூச்சி விரட்டி போன்ற இயற்கை முறை பூச்சி கொல்லிகள் பற்றியும் அதன் செய்முறைகள் பற்றியும் விளக்கினார். மேலும், மாணவிகள் சாம்சன் லெஸ்லியை பின்பற்றி, களப்பணியில் ஈடுபட்டு அவரது எள் வயலில் தெளிப்பான் மூலம் கற்பூர கரைசல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி பயிற்சி பெற்றனர். அது மட்டுமின்றி இயற்கையாகவே பூச்சியை விரட்டக் கூடிய நொச்சி, வேம்பு, எருக்கு, அரளி, பப்பாளி ஆகியவற்றின் இலைகளின் பயன்களை தெரிவித்தார். மே

லும், அவரது தென்னந்தோப்பில் ஊடுபயிராக உளுந்து, கடலை மற்றும் தட்டைப்பயறு ஆகிய பயிர்களை எவ்வித செயற்கை உரமும் இன்றி செழிப்பாக வளர்வதை மாணவிகள் கண்டனர். அது மட்டுமின்றி அவர் தனது சாகுபடிக்கு பயன்படுத்தும் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாங்குறுவை, மஞ்சப்பொன்னி போன்றவற்றை பற்றியும் மாணவிகள் கேட்டறிந்தனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூற்றான, "வீட்டை சுத்தமாக்கு, காட்டை குப்பையாக்கு" என்ற வார்த்தைகளை பின்பற்றும் விதமாக தனது பண்ணையில் உள்ள ஆடு, மாடுகளின் எருவை மட்டும் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் சாம்சன் லெஸ்லி முறையை கண்டு மாணவிகள் ஊக்கம் பெற்றனர்.

Tags

Next Story