11 மாதங்களாக செயல்பாட்டிற்கு வராத புதிய மின்பகிர்மான கோட்டம்
கெங்கவல்லி மின் வாரிய அலுவலகம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லியை தலைமையிடமாக வைத்து, புது மின்பகிர்மான கோட்டம் அமைக்கப்படும் என, 2022 ஜூலையில் தமிழக அரசு அறிவித்தது. இந்த கோட்டத்தில் ஆத்தூரில் இருந்த கெங்கவல்லி, வீரகனுார் உபகோட்டடம், வாழப்பாடியில் இருந்த தம்மம்பட்டி உபகோட்டம், அதுதவிர இங்குள்ள, 12 பிரிவு அலுவலகங்கள் இடம்பெறும் என்றும், தெடாவூர், கூடமலை, தம்மம்பட்டி ஆகிய துணை நிலையங்கள், 75,000 மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் இடம் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது.அதற்கேற்ப முதல்வர் ஸ்டாலின், கெங்கவல்லி உள்பட, 10 மின்பகிர்மான கோட்டங்களை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான விழா கெங்கவல்லி மின் வாரிய அலுவலகத்தில் நடந்தது. ஆனால் அரசு அறிவித்து தொடக்க விழா நடத்தி, 11 மாதங்களான நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து, 10 ரூபாய் இயக்கத்தின், சேலம் மாவட்ட செயலர் பிரபு கூறுகையில், "தம்மம்பட்டியில் உள்ள மின்நுகர்வோர், மின் பிரச்னைக்கு வாழப்பாடிக்கும், கெங்கவல்லி, வீரகனூர் பகுதிமக்கள், ஆத்துார் மின்கோட்ட அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதனால் புது கோட்டத்தை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி கூறு கையில், "அலுவலகம், கோட்ட பொறியாளர், அலுவலர் நியமனம் குறித்து அரசு அறிவித்த பின் புது கோட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.என்றார்
Next Story