புதிய மறை மாவட்டம் உருவாக்க வேண்டும்: கத்தோலிக்க கூட்டமைப்பு
கத்தோலிக்க கூட்டமைப்பு
சாத்தான்குளம், வடக்கன்குளம் மறை வட்டத்தை பிரித்து புதிய மறை மாவட்டம் உருவாக்கட வேண்டும் என வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பழமை வாய்த்தது எனவும், பெரிய மறை மாவட்டமாக இருப்பதால் அதில் பெரிய மறைவட்டமாக உள்ள சாத்தான்குளம், வடக்கன்குளம் ஆகிய மறை வட்டத்தை ஒருங்கிணைந்து புதிய மறை மாவட்டம் உருவாக்கிட கத்தோலிக்க கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து இதனை பிரிக்க வலியுறுத்தி கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மறை மாவட்டம் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது புதிய மறை மாவட்டம் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து இக்கூட்டமைப்பினர் மறை மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் மறை மண்டல கத்தோலிகக கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா சனிக்கிழமை சாத்தான்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு கடகுளம் தலைவர் கார்ல்லஸ் தலைமை வகித்தார். வடக்கன்குளம் பொன்னம்பலம், தெற்கு கள்ளிக்கு்ளம் ஆடிட்டர் மைக்கிள், அழகப்பபுரம் மரிய அந்தோணி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் ஜான் ததேயுஸ் வரவேற்றார். இதில்சட்ட ஆலோசகர் மனோகர் கலந்து கொண்டு பேசினார். பொருளாளர் மரியஜார்ஜ் ஆண்டறிககை படித்தார். கூட்டத்தில் சாத்தான்குளம், வடக்கன்குளம் மறை வட்டத்தை பிரித்து புதிய மறை மாவட்டம் தொடங்கிட தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டமைப்பினரை தொடர்ந்து புறக்கணித்து வரும் மறை மாவட்ட ஆயர் மற்றும் அவரது இணை பணியாளர்களை கண்டித்தும், பேச்சுவார்த்தைக்கு அழைத்திட வேண்டும். டிசம்பர் மாத முதல் வாரத்தில் புதிய மறை மாவட்டம் அமைக்க உறுதி அளிக்காவிட்டால் டிசம்பர் மாத இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்பி, எம்எல்ஏகளை அழைத்துச் சாத்தான்குளத்தில் மிக பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தான்குளம் , வடக்கன்குளம் மறை வட்டத்தில் ஏழை குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு கல்வி உதவி தொகை வழங்குவது, மன்னார்புரத்தில் துவங்கப்பட்டிருககும் பணிக்குழுகளின் கட்டட பணிக்கு உதவிடும் வகையில் பங்கு மக்களிடம் நன்கொடை பெறுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story