ஆத்தூர் : கொத்தாம்பாடியில் நியாயவிலை கடையை MP திறந்து வைத்தார்.

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் புதிய நியாயவிலை கடையை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கெளதமசிகாமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்துத் தர கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு புதிய நியாய விலை கட்டிடத்தை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் செழியன் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story