பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க புதிய முயற்சி

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை புதிய முயற்சி

அழிக்க முடியாத ஆனால் மனித குலத்துக்கு அழிவை உருவாக்கக்கூடியஒரு பொருளாக இருந்து வருகிற பிளாஸ்டிக் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சுய விழிப்புணர்வு இல்லாமல் சாக்கடைகளிலும் தெருக்களிலும் கொட்டுவதால் மழைக்காலங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெல்லம் புகும் அபாயம் ஏற்படுகிறது. அவ்வாறு சாக்கடைகளிலும் நீர் நிலைகளிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒட்டுமொத்தமாக கடலில் சென்று சேரும் நிலை வரும் போதுபருவநிலை மாற்றங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்படுகிறது. இதனை கலைய பல்வேறு வகையான முயற்சிகளை பல அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கைகளில் கிடைக்கிற பிளாஸ்டிக் பொருட்களை தங்கள் வீட்டில் உள்ள பழைய தண்ணீர் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் எவ்வளவு அதிகமாக கூடுதல் எடையுடன் அழுத்திக் கொடுக்கிறார்களோ அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 250 கிராம் முதல் 500 கிராம் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் பாட்டில்களில் அடைத்து கொடுத்த குழந்தைகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் உள்ள நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கதிர் கண் மருத்துவமனை மருத்துவர் அமுதவல்லி, நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை தலைவர் மற்றும் பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகளுக்கு பாராட்டி மரக்கன்றுகள் மற்றும் விதை பென்சில்களை பரிசுகளாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது பிளாஸ்டிக் பொருள்களை அழிக்க பல்வேறு முயற்சிகள் செய்தாலும், அதனை தவிர்ப்பது, தடுப்பது, அழிப்பது ஆகிய மூன்று முறைகளில் மட்டும் தான். ஒழிக்க முடியும் என்பதால் திருச்செங்கோடு நகராட்சி பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை நிர்வாகத்தினர் பள்ளி குழந்தைகள் மத்தியில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து, அதனை மாற்று வடிவில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனா். பிளாஸ்டிக் பாட்டில்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வேலி அமைப்பது, செடிகளுக்கான கூண்டு அமைப்பது, வீட்டு பிராணிகள் வளர்ப்பு கூண்டு அமைப்பது, போன்ற பல்வேறு யுக்திகளை கடைபிடிக்க உத்தேசித்து உள்ளனர். இதனை திருச்செங்கோடு நகராட்சி பாராட்டுவதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய கதிர் கண் மருத்துவமனை மருத்துவர் அமுதவல்லி, எந்த ஒரு பழக்க வழக்கத்தையும் சிறு குழந்தைகளிடமிருந்து தொடங்கினால் தான் அந்தத் திட்டம் வெற்றியடையும் என்பது ஜப்பான் நாட்டினர் கண்டுபிடித்த ஒரு யுத்தியாகும். அதனைப் போலவே நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் செயல்படுத்தும் இந்த திட்டம் பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன். வெற்றியடைய வாழ்த்துகிறேன் என கூறினார். நிகழ்ச்சியில் நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சேன்யோகுமார், செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார், பொருளாளர் கணேஷ்குமார், துணை செயலாளர்கள் கலையரசி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை நிர்வாகி வெங்கட் அனைவரையும் வரவேற்றார்.

Tags

Next Story