போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

புதிய நூலகம் திறப்பு

போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் புனரமைக்கப்பட்ட புதிய நூலகத்தை முன்னாள் எம்எல்ஏவும், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவருமான சேகரன் திறந்து வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1987-1988-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சாா்பில் ரூ.2.50 லட்சத்தில் பள்ளியில் உள்ள நூலகம் புனரமைக்கப்பட்டு புதிய நூல்கள் வாங்க வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை முன்னாள் எம்எல்ஏவும், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவருமான சேகரன் திறந்து வைத்தாா். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேஷ் மூா்த்தி, தலைமை ஆசிரியா்கள் ராமானுஜம், சுதா, திமுக நகரத் தலைவா் தனசேகரன் வழக்குரைஞா்கள் தருமன், அரியநாதன் மற்றும் முன்னாள் மாணவா்கள் அன்பு செழியன், கம்பைசிவன், குமாா், சேகா், பழனி மற்றும் ஆசிரியா்கள், முன்னாள் மாணவ, மாணவிகள் உடனிருந்தனா்.

Tags

Next Story