புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு !

புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு !

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பரமத்தி வேலுார் தாலுகா பரமத்தி காவல் நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர்  பொறுப்பேற்றுக் கொண்டார்.
பரமத்தி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்‌ நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் கனேஷ்குமார் பரமத்தி காவல் நிலையத்திற்கு கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கனேஷ்குமார் நேற்று முன்தினம் பரமத்தி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு பரமத்தி காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story