எடப்பாடியில் 3கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்!

எடப்பாடியில் 3கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்!

 பூமி பூஜை

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஏழு இடங்களில் பூமி பூஜை - நகர மன்ற தலைவர் பாட்ஷா தொடங்கி வைத்தார்.
எடப்பாடியில் ரூபாய் 3,கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பணிகளுக்கு நகர மன்ற தலைவர் பாட்ஷா, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள 30 வார்டுகளில் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம், முப்பனூர், சின்ன மணலி,மோட்டூர், ஆவணியூர், வீரப்பம்பாளையம், உள்ளிட்ட ஆறு இடங்களை தேர்வு செய்து ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் 6 - புதிய துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை பணிகளை நகர மன்ற தலைவர் பாஷா, நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து கவுண்டம்பட்டி அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளை நகர மன்ற தலைவர் பாஷா,மற்றும் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் மருத்துவர்,சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story