விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு இடிந்து சேதம்
இடிந்து தரைமட்டமான வீடு
விருதுநகர் ஏடிபி காம்பவுண்ட் 3வது தெருவில் அதிமுகவைச் சேர்ந்த 7வது வார்டு கிளைச் செயலாளர் சுந்தரபாண்டியன் எனபவர் தனது பழைய வீட்டின் மேல் இரண்டு மாடி கள் கட்டி வருவதாக கூறப்படுகிறது இதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் வேறு வீட்டில் வசித்து வருவதாகவும்,
எதிர்பாராத விதமாக இன்று காலை இரண்டு மாடி கட்டிடங்களும் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தரைத்தளத்தில் இருந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் அதற்கு மேலே இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டியதன் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாகவும்,
மேலும் கட்டிட பணி நடைபெற்றதன் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் யாரும் வீட்டில் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் கட்டிடத்தின் அருகில் மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சைக்கிள்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்