அடுப்பில்லா சமையல் உணவுத் திருவிழா

அடுப்பில்லா சமையல் உணவுத் திருவிழா
கல்லூரி சமையல் திருவிழா
மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் அடுப்பில்லா சமையல் உணவுத் திருவிழா நடந்தது.
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் "அடுப்பில்லா சமையல் உணவுத் திருவிழா" (Fire less cooking) நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், மருதுபாண்டியர் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறைத்தலைவர் கே.ராஜபிரியா நடுவராக கலந்து கொண்டு இப்போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்தார். வெற்றி பெற்ற குழுவினரை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில், மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story