வட மாநில இளைஞர் ஒருவர் பலி - இருவர் காயம் !

வட மாநில இளைஞர் ஒருவர் பலி -  இருவர் காயம் !

construction work 

ரேவதி காலேஜ் ஆப் நர்சிங் & பாராமெடிக்கல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் பலியானர்.
ரேவதி காலேஜ் ஆப் நர்சிங் & பாராமெடிக்கல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் பலி, இருவர் காயம். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து புதுப்பாளையத்தில் உள்ள ரேவதி காலேஜ் ஆப் நர்சிங் & பாராமெடிக்கல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.வட மாநில இளைஞர்கள் இங்கு கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கம் போல இன்று கட்டிட பணிகள் நடந்து வந்தது. அப்போது அதிக அளவு டைல்ஸ் கற்களை ஏற்றி லிப்டில் மேல் நோக்கி மூன்றாவது மாடி அருகே செல்லும் போது பாரம் தாங்காமல் கம்பி கயிறு தடம்புரண்டதில் திடீரென லிப்ட் கீழே சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீகார் மாநிலம் சுபவுல் பகுதியை சேர்ந்த சோனு (22) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது உடல் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. மேலும் காயம்பட்ட இருவர் திருப்பூர்lதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கட்டிட பணியில் ஈடுபட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags

Read MoreRead Less
Next Story