கீழே விழுந்த பனை தொழிலாளி சிகிச்சை பலனின்றி மரணம்
சிகிச்சை மரணம்
நெல்லை மாவட்டம், மேலச்செவலை பகுதியை சேர்ந்த பனைதொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம், மேலச்செவலை சேர்ந்தவர் பாண்டி (69). பனை தொழிலாளியான இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி அங்குள்ள வெள்ளப்பாண்டி என்பவர் தோட்டத்தின் பனைமரத்தில் ஏறியபொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஏப்.15) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story